ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது!

ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது!

Update: 2024-12-19 05:35 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது! அம்பேத்கரை விமர்சனம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக குற்றச்சாட்டு... திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கரை விமர்சனம் செய்து பேசியதாக மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்.. அப்போது அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து முற்பட்டபோது போலீசாருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Similar News