கேரளா மாநிலம் மருத்துவ கழிவுகளை நெல்லை மாநகர நடுக்கல்லூர் பகுதியில் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அண்டை மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்க கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார் என மு.க ஸ்டாலினை குற்றம் சாட்டியுள்ளார்.