அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை தமிழ் பாட நூலை வாசிக்க சொல்லி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை தமிழ் பாட நூலை வாசிக்க சொல்லி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

Update: 2024-12-19 07:34 GMT
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பல்வேறு பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார் குறிச்சிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்கள் எண்ணிக்கை வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டிருந்தார் மேலும் மாணவர்களின் வாசிப்பு திறனை அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாட நூலை கொடுத்து பல்வேறு மாணவர்களை வாசிக்க சொல்லி வாசிப்பு திறனை ஆய்வு செய்தார் வாசிப்பு திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார் இதனை அடுத்து அசாவீரன் குடிக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினையும் ஆய்வு செய்தார் அப்போது குழந்தைகளுக்கு சுகாதாரமான சத்தான உணவுகளை வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் செந்துறை அரசு மாணவர் விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர் விடுதியில் தங்கி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார் மேலும் அவர்களுக்கு வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார் இதேபோல் குறிச்சிக்குளம் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியையும் பார்வையிட்ட ஆட்சியர் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து விடுதியை சுத்தமாகவும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் ஆய்வின் போது பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News