வீடு இழந்த குடும்பத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்
வீடு இழந்த குடும்பத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆறுதல்
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தையாபுரம், மற்றும் தெற்கு பூலாங்குளம் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்தவர்களுக்கு கழக மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலெட்சுமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் ஆறுமுகம், அம்மா பேரவை செயலாளர் சௌந்தர் என்ற ஷாகுல் ஹமீது, மேலஇலந்தைகுளம் எஜமான் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கனகராஜ், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுடலை சங்கர், கினை செயலாளர்கள் சாமிதுரை, மகேந்திரன், தங்கராஜ், மகாராஜ பாண்டியன், கழக நிர்வாகிகள் அல்லிதுரை, அந்தோணி, செல்வராஜ், சண்முகசுந்தரம், சீனி முத்தையா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.