கேத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 -25 ஆண்டுக்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்...
கேத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 -25 ஆண்டுக்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்...
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 -25 ஆண்டுக்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்... திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர்... மேலும் அரவைப் பருவத்திற்கு சுமார் 76 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அறுவை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கரும்பின் 1 டன் ஒன்றுக்கு 3,267 ரூபாய் வழங்கப்படுவதாகவும் மேலும் ஊக்கத்தொகையாக 215 ரூபாய் தரவுள்ளதாகவும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்.. கரும்பு டன் ஒன்றுக்கு 5000 ஆயிரம் தருவதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக அரசு கூறியிருந்ததாகவும் ஆனால் தற்பொழுது 3200 மட்டுமே தருவதாகவும். அதே நேரத்தில் வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும் மேலும் டோல்கேட் இருப்பதால் கரும்பு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்புகள் உள்ளன எனவே அரசு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றினால் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்து இந்த ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப தயாராக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்ட கரும்பு ஆலை அறவையை மீண்டும் தனி பூஜையாக செய்து தொடங்கி வைத்த மில்லின் அதிகாரிகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இந்நிகழ்வில் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.