அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து.விசிக கிழக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் நா.தமிழ் முத்து தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் கையில் அம்பேத்கரின் திருவுருவப்படத்தை ஏந்தி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்“இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை,புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்தும். அவரை பதவி விலக வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக ஆளும் அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் திமுக கூட்டணி கட்சியினர் கட்சியினர் தமிழ் புலிகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் உடன் இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசி காவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்து விட்டனர்.