சங்கரன்கோவிலில் பேராசிரியர் அன்பழகன் 102-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பேராசிரியர் அன்பழகன் 102-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேராசிரியர் அன்பழகன் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் இன்று காலையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, யூ,எஸ்,டி.சீனிவாசன். பரமகுரு, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.