பல்லடம் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பல்லடம் அருகே தெற்குப்பாளையம் பகுதியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி பனியன் அட்டை ஏற்றி சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. 60 ஆயிரம் மதிப்பிலான அட்டை மற்றும் வேன் முற்றிலும் தீயில் எரிந்து சேதம்.

Update: 2024-12-19 05:48 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தெற்குப்பாளையம் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேன் ஒன்று பனியன் அட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது அப்போது மங்கலம் சாலை மூணுமடை பகுதியை கடந்த போது எதிர்பாராத விதமாக வேனில் இருந்து புகையானது வெளியேறியது தொடர்ந்து வாகனத்தை இயக்கிய சதீஷ்குமார் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி பார்த்த பொழுது திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்பு துறை அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இருப்பினும் வேன் மற்றும் வேனில் கொண்டுவரப்பட்ட பனியன் அட்டைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்தில் சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து சேதம் ஆகியது மேலும் இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News