தள்ளுவண்டி காய்கறி விற்பனையாளர்கள் 3பேருக்கு 4 ஆண்டு சிறை

மயிலாடுதுறையில் வியாபாரப் போட்டியில் வீட்டிற்கு தீ வைத்த 3 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு. அபராதத்தொகையில் ரூபாய் 40 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு

Update: 2024-12-19 08:32 GMT
மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் அவையாம்பாள்(58) இவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் காய்கறி வியாபாரம் சரியாக இல்லாததால் அவையாம்பாளை காய்கறி வியாபாரம் செய்யக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் வியாபாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ்(27) அவரது நண்பர்கள் ஸ்ரீராம்(33) பகவத்(26) ஆகியோர் அவையாம்பாள் வீட்டிற்கு சென்று காய்கறி வண்டியை சேதப்படுத்தி கூரை வீட்டை தீவைத்துக் கொளுத்தினர். இது குறித்து அவையாம்பாள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வீட்டிற்கு தீ வைத்து கொளுத்திய சதீஷ் ஸ்ரீராம், பகவத் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். மேலும். குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராதத்தொகை 48 ஆயிரம் ரூபாயில் 40 ஆயிரத்தை இழப்பீடாக பாதிக்கப்பட்ட அவையாம்பாளிடம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜராகி வாதாடி தண்டனை பெற்று தந்தார்.

Similar News