சங்கரன்கோவிலில் உள்துறை அமைச்சரே கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
உள்துறை அமைச்சரே கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தபால் அலுவலகம் முன்பு இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், சீனிவாசன், பத்மநாதன், மாவட்ட பொருளாளர் இல,சரவணன், நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.