கோணமூலை ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி
கோணமூலை ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி
கோணமூலை ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண மூலை ஊராட்சிக்கு புதிதாக நஞ்சப்பகவுண்டன் புதூரில் அலுவலக கட்டிடம் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை நேற்று காலை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. இளங்கோ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன், கிளைச் செயலாளர் மகாலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.