டிச.22 ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
டிச.22 ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது
அரியலூர், டிச.19- டிசம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நாளை டிசம்பர் 22 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கண் புரை கண்ட நோயாளிகள் முகாம் தினத்தன்று பாண்டிச்சேரியை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்களில் உள்விழி (IOL)லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும், மேலும் மருந்து, மாத்திரை, போக்குவரத்து செலவு, தங்கும் வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரிய வாய்ப்பை கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.