குமரி : அமித்ஷாவை கண்டித்து திமுக போராட்டம்

நாகர்கோவில்

Update: 2024-12-19 08:18 GMT
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் நாகர்கோவில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் இன்று 19-ம் தேதி நடைப்பெற்றது.       மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை வகித்தார்.  மேலும் தபால் நிலையம் முன்பிலிருந்து பேரணியாக அண்ணா விளையாட்டு அரங்கம் வரை சென்று அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலையினை தண்ணீர் ஊற்றி கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமித்ஷாவால் ஏற்பட்ட அவமானத்தை கழவி  மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.        ஆர்பாட்டத்திற்கு மாநில, மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News