ஆவுடையார் கோவில் பகுதியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" நிகழ்ச்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். அப்பொழுது அப்பகுதி மக்கள் கொடுத்த கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக நிவர்த்தி செய்வேன் என உறுதியளித்தார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.