பள்ளி மாணவர் உயிரிழப்பு, நிவாரணம் கோரி பொதுமக்கள் போராட்டம்
பள்ளி மாணவர் உயிரிழப்பு, நிவாரணம் கோரி பொதுமக்கள் போராட்டம்
மதுராந்தகம் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவன் நான்கு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு.பொதுமக்கள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி பொதுப்பணித்துறை அலுவலகத்தின் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம் செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி அடுத்த மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் புவனேஷ்..இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லக்கூடிய கிளியாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பொழுது வெள்ளத்தில் புவனேஷ் என்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி அடித்து சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் மாணவனின் உடலை தேடும் பணியில் தொடர்ந்து நான்கு நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று தீயணைப்புத் துறையினர் மாணவனின் உடலை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாணவனின் உயிரிழப்பிற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி மதுராந்தகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் இந்த மாணவனின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் இந்த மாணவனின் குடும்பத்தில் எவையேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடியஇந்த சம்பவமானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.