கோரிக்கைகளை நிறைவேற்ற ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

தர்மபுரியில் நேற்று மத்திய மற்றும் மாநிலத் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற, ஓய்வுதியர்கள் தின விழா கொண்டாடப்பட்டது அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Update: 2024-12-19 01:56 GMT
மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா நேற்று தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் டி. பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணி வரவேற்றார். போக்குவரத்து நல ஓய்வூதியர் அமைப்பு மாநில இணை செயலாளர் கே.குப்புசாமி துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் எம். பெருமாள், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி, போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாவட்ட இணை செயலாளர் வி. கணபதி, அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வி. முருகேசன், எல் ஐ சி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஏ. சோமசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழக முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் மூத்த குடிமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/- வழங்கவேண்டும்.மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் "காசில்லா மருத்துவம்" உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவ செலவுத் தொகையினை திரும்பப்பெற நீண்ட காலமாக தேங்கியுள்ள மனுக்களை முத்தரப்பு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News