குமரி : அனந்தனார்  கால்வாயை மண் கொட்டி அடைத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை 

விவசாயிகள் புகார்

Update: 2024-12-19 02:35 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்களை அழித்து நீர் நிலைகளை மூடி நடந்து வரும் பணிகள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் தடைப்படாமல் நடந்து வருகிறது.       இந்நிலையில் சுங்கான்கடை அருகே ஐக்கான குளத்திற்கு தண்ணீர் வருகின்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆனந்தனாறு வெஸ்ட் கால்வாயினை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மூடிவிட்ட தகவல் அறிந்து விவசாய சங்க பிரதிநிதிகள் விஜி, பாசனத்துறை சேர்மேன் வின்ஸ் ஆன்றோ ஆகியோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.        அதன்  அடிப்படையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் ராஜன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தற்போது மண் கொண்டு மூடப்பட்ட கால்வாயை உடனடியாக திறக்க கோரியபோது வேறு வழியின்றி தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் கனரக எந்திரம் கொண்டு கால் வாயை மூட போடப்பட்ட மண்ணை மாற்றினர்.   தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழி சாலை அமைப்பதாக கூறி தொடர்ந்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை செய்து வரும் செயலை நிறுத்தி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News