வெள்ளகோவிலில் மது விற்றவர் கைது

வெள்ளகோவிலில் தடை செய்யப்பட்ட நேரத்தில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது

Update: 2024-12-19 05:19 GMT
வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளகோவில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து வெள்ளகோவில் வள்ளியறச்சல் சாலையில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெங்கமேடு விநாயகர் கோவில் அருகில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த கச்சேரி வலசை சேர்ந்த குமார் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News