ராமநாதபுரம் மீனவர் படகு மீட்பு
தொண்டி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கவிழ்ந்த படகை மரைன் போலிசார் மீட்டனர்.;
ராமநாதபுரம் தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த மீனவர்கள் குணம் (45), சரத்குமார் (30). இருவரும் நேற்று ஒரே படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். சுமார் 8 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் பல்த் த காற்று வீசியதில் படகு கவிழ்ந்துள்ளது. செல்போன் மூலம் கரைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சக மீனவர்கள் இருவரையும் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந் மரைன் போலிசார் தங்கள் படகிலிருந்து கயிறு கட்டி கவிழ்ந்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்