சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல்

சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது திடீரென தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2024-12-10 05:04 GMT
விருதுநகரில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை விசாரிக்க சென்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது திடீரென தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் அய்யனார் காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(27), கனக முனீஸ்வரன்(24), விமலேஷ் குமார்(24) மற்றும் கலைஞர் நகரை சேர்ந்த தனுஷ் குமார்(25) ஆகியோர் குடிபோதையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டஇளைஞர்களிடம் விசாரிக்க சென்ற அவரை ஒருமையில் தரைகுறைவாக பேசியும் திடீரென தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெண் டிஎஸ்பி, இரு காவலர்கள் என தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News