ஜீவா நகரில் நீரிழிவு நோயால் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு. விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
ஜீவா நகரில் நீரிழிவு நோயால் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு. விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
ஜீவா நகரில் நீரிழிவு நோயால் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு. விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, ஜீவா நகரை சேர்ந்தவர் ஆனந்த ரூபன் வயது 42. இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு ஜெயபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரக்திஷா என்ற 7- வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 5- வருடங்களாக நீரிழிவு நோயால் ஆனந்த ரூபன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், விரக்தி அடைந்த ஆனந்த ரூபன் டிசம்பர் 8-ம் தேதி மதியம் 2 மணி யில் இருந்து 2:30- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ஆனந்தரூபனின் சகோதரி விஜயா வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆனந்த ரூபனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.