குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Update: 2024-12-10 15:27 GMT
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல்துறையினரால் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏலமிடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கரூர் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன் படி அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ள 26 இரண்டு சக்கர வாகனங்களை கரூர் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து வருகிற 13.12.23-ம் தேதி காலை 11.00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை கரூர் ஆயுதப்படை மைதானத்தில் 12.12.24-ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்படி வாகனங்களை நேரில் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மது விலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்புதொகையாக ரூ.5000/- செலுத்தி 12.12.24-ம் தேதி மாலை 05.00 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து இரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். வாகனம் ஏதும் ஏலத்தில் எடுக்கவில்லையெனில் செலுத்திய காப்புத்தொகையை பொது ஏலம் முடிந்தவுடன் திருப்பி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கோரும் நபர் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையினை அரசு நிர்ணயம் செய்துள்ள மத்திய சரக்கு மற்றும் சேவைவரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவைவரி உடன் சேர்ந்து முழுவதையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை அன்றைய தினமே உள்ளது உள்ளபடியே என்ற நிலையில் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கரூர் மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரடியாக தொடர்புகொள்ளவும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News