மது அறிவிப்பு வரும் வரை மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-12-11 08:59 GMT
வங்க கடலில் காற்றின் வேகம் 55 கிலோ வீசக்கூடும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காற்றின் வேகம் 55 கிலோ இருக்கும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக, ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம்,தொண்டி,கீழக்கரை,ஏர்வாடி,மூக்கையூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடைந்து விடாமல் இருக்க மீனவர்கள் படகுகளை கண்காணித்து வருகின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர். காற்றின் வேகம் காரணமாக வங்க கடலில் கடல் நீர் மட்டம் உயர்ந்து கானப்படுகிறது.

Similar News