ஜவகர் பஜார்- கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஆய்வு நடைபெற்றது.
ஜவகர் பஜார்- கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஆய்வு நடைபெற்றது.
ஜவகர் பஜார்- கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஆய்வு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் பள்ளி கட்டிட கட்டுமான பணிகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவு சார் மையத்தையும் ஆய்வு செய்தார். மேலும், கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.