தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் , தேவாங்கர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரியில் 21.12.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் தகவல்.;
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் வரும் 21.12.2024 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, இன்னோவல் மென்பொருள் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவை, அடையார் ஆனந்த பவன், ரிலையன்ஸ் ஜியோ, ராயல் என்பீல்டு, விவிவி இதயம் நல்லெண்ணெய், ஆனமலைஸ் டொயோட்டா போன்ற 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் https://forms.gle/h5FVxdhb6t9HZy5V6 Google Form I பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail. com) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.