பெருந்துறையில் பரிதாபம்

ஐ.டி. ஊழியர் நெஞ்சு வலியால் திடீர் சாவு

Update: 2024-12-12 03:42 GMT
ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே உள்ள பாப்பம்பாளையம், தாசங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (31). திருமணமாகவில்லை. தனது தாயார் முருகாயாளுடன் வசித்து வந்தார். பொறியியல் பட்டதாரியான பிரபாகரன் ஈரோட்டில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து வந்தபோது, திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வீட்டின் வாசல் படியிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது தாயார் முருகாயால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News