கடந்த 20 நாட்களுக்குப் பின்பு தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை
மழை
வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தேனி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தேனி மாவட்டம் முழுவதும் முற்றிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று தேனி மாவட்டம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உத்தமபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.