ரெட் அலர்ட் இருள் சூழ்ந்த மேகமூட்டத்துடன் மழை!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் இருள் சூழ்ந்த மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி; வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் காற்று வீசகூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்களில் 3000 திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வானம் இருள் சூழ்ந்த நிலையில் மழை பெய்ய துவங்கியுள்ளது இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.