சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

மதுரை மாவட்டம் மேலூரில் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-12-12 11:31 GMT
டங்ஸ்டன்ன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராகவும் ஏல அனுமதி வழங்கிய ஒன்றிய அரசை கண்டித்தும், மதுரை மாவட்டம் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு நாளை (13.12.2024) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேலூர் போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. கார்த்திகை தீபத்திருநாளில் பாதுகாப்பு வழங்க இயலாது என்ற காரணத்தை கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

Similar News