ஒரே நாடு ஒரே தேர்தல்... ஜனநாயக விரோத நடவடிக்கை - முதல்வர் சாடல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

Update: 2024-12-12 14:28 GMT
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை. மாநிலங்களின் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். இந்தியாவே எழுக! இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.

Similar News