வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு.
வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு.
வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக தமிழக முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் மீண்டும் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கிய மழை தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பாதிப்பு ஏதேனும் கரூர் மாவட்ட பகுதிகளில் ஏற்பட்டால் 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணிலும், அல்லது 1800 425 4556 என்ற எண்ணிலும், அல்லது 04324-256306 என்ற தொலைபேசி எண்ணிலும், 8220165405 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.