வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்து
வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சில நாட்களாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. இதனால் ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.