ராசிபுரத்தில் கொட்டும் மழையிலும் தரமற்ற முறையில் நடைபெற்று வரும் சார் பதிவாளர் கட்டிட அலுவலகம்: அரசு பணம் வீணாவதை கண்டு மக்கள் வேதனை..

ராசிபுரத்தில் கொட்டும் மழையிலும் தரமற்ற முறையில் நடைபெற்று வரும் சார் பதிவாளர் கட்டிட அலுவலகம்: அரசு பணம் வீணாவதை கண்டு மக்கள் வேதனை..

Update: 2024-12-12 14:53 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு தற்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் சுமார் 1.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் முதற்கட்ட பணியான பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை முதல் மதியம் வரை கொட்டும் மழையில் கூட ஒப்பந்ததாரர் முறையாக பணிகளை பின்பற்றாமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது போன்ற தரமற்ற பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருவதால் தரமற்ற கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அரசு பணம் இதுபோன்று வீணாவதை கண்டு வேதனை கொண்டனர். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது..

Similar News