முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-12-12 15:45 GMT
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 5--ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று 12-ந் தேதி  இரவு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது இதனையொட்டி காலையில் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில்  சரவண பொய்கையில் ஒரு  வெள்ளி குடத்தில் புனித நீர் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இரவு 7 மணி அளவில் கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .அங்கு  யாக பூஜைகளுடன் புனித நீர் கொண்டு தங்க கிரீடத்தில் தெளித்து மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு தங்கக் கிரீடம் சூட்டி நவரத்தினங்கலான செங்கோல் சூடி கோலாகலமாக  முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது . இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

Similar News