கரூரில், கோரிக்கைகளை வரலியுருத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
கரூரில், கோரிக்கைகளை வரலியுருத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
கரூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் 200-கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் காலை 7 மணிக்கு வருபவர்கள் 100 பேருக்கும், மதியம் வருபவர்கள் 35 பேருக்கும், இரவு 30 பேருக்கும் பணி வழங்குவதாக கூறப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் எவ்வளவு என்று தெரிவிக்கப்படவில்லை என்றும், அந்நிறுவன மேற்பார்வையாளர், ஒப்பந்த பணியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று வேலை செய்யச் சொல்வதாகவும், முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், வார விடுமுறை அளிப்பது இல்லை எனக் கூறி, ஓய்வில் இருக்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று கல்லூரி முதல்வர் அறை முன்பாக 35க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பசுபதிபாளையம் காவல் நிலைய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.