சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. கடந்த 4-ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (புதன்கிழமை) மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று (டிச.12) காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.