மழையால் அவதி துடைப்பம், முறம், கொண்டு மழை நீரை அப்புறப்படுத்திய ஆசிரியர்கள்..

மழையால் அவதி துடைப்பம், முறம், கொண்டு மழை நீரை அப்புறப்படுத்திய ஆசிரியர்கள்..

Update: 2024-12-12 14:29 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம், கோனேரிப்பட்டி பஞ்சாயத்து, மேட்டுக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்  படித்து வருகின்றனர். இன்று காலையில் பெய்த மழையின் காரணமாக பள்ளி வகுப்பறை கட்டிடம் சேதமான நிலையில் இருந்ததால் அதில் கசிந்த மழைநீர் வகுப்பறையில் தேங்கியது. இந்நிலையில், காலையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்கள் தண்ணீரை துடைப்பம், முறம் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வகுப்பறைக்குள் மழை நீர் தேங்கியால் அருகே உள்ள நூலக கட்டிடத்தின் வெளியே மாணவ, மாணவிகள் நிற்கவைக்கப்பட்டனர். மழைநீர் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வீடியோ பதிவு சமூக வலைதளவில் வைரலாகி வருகிறது.

Similar News