ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை ஒட்டி அணைக்கும் கரங்கள் இல்லத்தில் இனிப்புகள் உணவு வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை ஒட்டி அணைக்கும் கரங்கள் இல்லத்தில் இனிப்புகள் உணவு வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

Update: 2024-12-12 14:04 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், காட்டூர் சாலையில், அணைக்கும் கரங்கள் என்ற மனநல காப்பகம் 26 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு, 30 குழந்தைகள் உள்பட, 60க்கும் மேற்பட்டோர் பராமரிப்பில் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் இங்கே ரஜினி ரசிகர்கள் அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் ராசிபுரம் நகர செயலாளர் வழக்கறிஞர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜே. சாம், ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள 60க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகளுடன் காலை உணவை வழங்கினர். தொடர்ந்து ரஜினி சிறப்பாக வாழ பிரார்த்தனை மேற்கொண்டு ரஜினிகாந்த் வாழ்க என ரஜினி ரசிகர்கள் கோஷமிட்டனர். மேலும் இதே போல் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கி சிறப்பித்தனர். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் நடித்த தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளதையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Similar News