பள்ளிவிடுமுறை விடப்படாததால் மாணவ மாணவியர் மழையில் நனைந்து அவதி: பெற்றோர்கள் வேதனை..

பள்ளிவிடுமுறை விடப்படாததால் மாணவ மாணவியர் மழையில் நனைந்து அவதி: பெற்றோர்கள் வேதனை..

Update: 2024-12-12 14:15 GMT
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மிதமானமற்றும் கனமழைபெய்யும் என வானிலை ஆய்வுமைய்யம் அறிவித்தது‌. இந்நிலையில் நாமக்கல், சென்னை,கருர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது. இதனால் அந்த அந்த. பகுதி மாவட்டஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம், புதுப்பாளையம் வடுகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே மழைபெய்து வந்தது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் பள்ளிமாணவ மாணவியர் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றனர். ஒருசிலர் குடையுடன் சென்றனர். பலமாணவ மாணவியர் நனைந்து கொண்டே சென்றது பரிதாபமாக இருந்தது. மேலும் ராசிபுரம் பகுதியில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்கு காலதாமதம் ஏற்பட்டது.

Similar News