தாய் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சிவகங்கை அருகே குடும்பத் தகராறில் தாய் தனது இரு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததால் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள திருமன்பட்டியை சேர்ந்த சந்திரன், ரஞ்சிதா தம்பதியரின் இவர்களுக்கு நான்கு வயதில் கீர்த்தி என்ற பெண் குழந்தையும் மூன்று வயதில் சங்கீதா என்ற பெண் குழந்தையும் உள்ள நிலையில் சந்திரன் கம்பி கட்டும் தொழில் செய்து வருவதாகவும் கணவர் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்திரன் வேலைக்காக வெளியூர் சென்ற நிலையில் திருமலை என்னும் ஊர் பகுதியில் ரஞ்சிதா சுற்றித்திரிந்துள்ளார் சந்திரனுக்கு தெரிந்த நபர் ஒருவர் உனது மனைவி திருமலை பகுதியில் சுற்றி திரிகிறார் என தகவல் தெரிவிக்கவே சந்திரன் ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு குழந்தைகள் எங்கே எனக் கேட்ட பொழுது இரண்டு குழந்தைகளையும் தாய் ரஞ்சிதா கீழப்பூங்குடி அய்யனார் கோவில் அருகேவுள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறவே அதிர்ச்சி அடைந்த சந்திரன் மதகுபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருகுழந்தைகளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரஞ்சிதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக தாயே பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது