ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப்பட்டது
அரியலூர், டிச.12 - ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட்டார், இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் காலை 6 மணி வரை மொத்தம் 266.4 மில்லிமீட்டர் மழை பதிவானது நேற்று காலை முதலே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது அவ்வப்போது காற்றும் வீசுவதால் மழையின் வேகமும் அதிகரிக்கிறது ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் வாகனத்தை இயக்க முடியாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் கழிவு நீர் மழை நீருடன் சாலைகளில் வழிந்து செல்வதை தடுக்கும் வகையில் நகராட்சி பணியாளர்கள் கழிவு நீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை அகற்றி கழிவு நீர் வாய்க்காலில் மழை நீரும் செல்லும் வகையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் சின்னவளையம் அருகே உள்ள மணக்கரை கிராமத்திலும் மழை நீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடி வீடுகளில் புகும் அச்சத்தில் இருந்த பொதுமக்கள் முத்து நகராட்சி நிர்வாகத்தில் தகவல் தெரிவித்து ,நகராட்சி ஆணையர் அசோக்குமார் பொறியாளர் ராஜகோபாலன் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் வாய்க்கால் அடைப்பை சீர் செய்து மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் மேட்டுத்தெருப் பகுதி சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது இதனால அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது