தமிழக வெற்றி கழகம் சார்பில் முதல் கட்சியாக நிவாரண பொருட்கள் வழங்கிய ஆறுதல்
தமிழக வெற்றி கழகம் சார்பில் படை வீக்கம் கிராம மக்களுக்கு முதல் கட்சியாக நிவாரண பொருட்கள் வழங்கிய ஆறுதல் கூறினர்;
அரியலூர், டிச.13 - ஜெயங்கொண்டம் - முதல் கட்சியாக களத்தில் இறங்கிய தமிழக வெற்றி கழகம் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் வடவீக்கம் பகுதியில் தொடர் மலையின் காரணமாக வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ளாத நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துப்புரவு பணியாளர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் களத்தில் இறங்கினர் இதனையடுத்து மழையினால் பாதிப்பு அடைந்த பகுதிகளை நேரில் பார்வை இட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் மார்ட்டின் மரிய டோணி தலைமையில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவாசிய நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினர். மேலும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் எனவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் குறிப்பு:-விளம்பரதாரர் அல்ல.