தொடர் கனமழை.,அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்., விவசாயிகள் நிவாரண வழங்க கோரிக்கை
தொடர் கனமழை.,அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்., விவசாயிகள் நிவாரண வழங்க கோரிக்கை;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் தொடர் கனமழை.,அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்., விவசாயிகள் நிவாரண வழங்க கோரிக்கை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம்,அத்திகோவில்,கூமாபட்டி, தம்பிபட்டி,மகாராஜபுரம், தானிப்பாறை,இலந்தைகுளம், கோட்டையூர்,சுந்தரபாண்டியம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இன்று அதிகாலை முதல் மாலை வரை பரவலாக கனமழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முதல் போக நெல் நடவு பணியினை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் செய்து விவசாய பணியினை மும்முறமாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக விளைந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து கிடப்பதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதால் விவசாயிகள் தங்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.மேலும் அறுவடை நேரத்தில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயத்திற்காக தங்கள் வாங்கிய கடனை கூட அறுவடை செய்து கட்ட முடியாத சூழ்நிலை தற்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்கக் கூடிய நிலையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையினால் பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.