முறையாக பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பேருந்தை முற்றுகையிட்ட பெண்கள்*

முறையாக பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பேருந்தை முற்றுகையிட்ட பெண்கள்*;

Update: 2024-12-14 02:37 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கள் பகுதிக்கு முறையாக பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பேருந்தை முற்றுகையிட்ட பெண்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி பகுதிக்கு அத்திகுளம், நாச்சியார் பட்டி, அனைத்தலப்பட்டி, அச்சம் தவிர்த்தான், நதிக்குடி ,விளாம்பட்டி வழியாக நாள் ஒன்றுக்கு பத்து முறை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிவகாசி மார்க்கத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இந்த ஊர்கள் வழியாகவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருபதுக்கு மேற்பட்ட கிராமங்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் இந்தப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மாலை நேரத்தில் விளாம்பட்டி வழியாக சிவகாசி செல்லக்கூடிய பேருந்து வழித்தடத்தை மாற்றி அந்தப் பேருந்தை வேறு வழி தடத்திற்கு இயக்குவதால் அந்த பேருந்தில் பயணிக்கும் பொது மக்கள், மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தங்கள் பகுதிக்கு முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் குறிப்பாக மாலை நேரத்தில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதால் கடும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும் கூறி மாற்று வழி தரத்தில் செல்ல முயன்ற பேருந்தை பெண்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட பெண்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை கைவிடப்பட்டது.

Similar News