ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் படத்துக்கு மலரஞ்சலி
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.;
அரியலூர், டிச.14 - உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அரியலூர் செட்டிக் ஏரிக்கரையிலுள்ள காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், நகரச் செயலர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலர் செந்தில்குமார், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி, பொருளாளர் சிற்றம்பலம், மதிமுக ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். :