கொங்கு நகர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர்க்கு உற்சாக வரவேற்பு.
கொங்கு நகர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர்க்கு உற்சாக வரவேற்பு.
கொங்கு நகர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அமைச்சர்க்கு உற்சாக வரவேற்பு. கரூர் மாவட்டம், வெங்கமேடு, கொங்கு நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் ரோஜா மலரை அமைச்சருக்கு கொடுத்து வரவேற்பு கொடுத்தது அனைவரையும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து விழா கமிட்டினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்று வேத மந்திரங்களை முழங்கி, கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.