விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்திட என்றும் உறுதுணையாக இருப்பேன். கரூரில் ஆணழகன் போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.
விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்திட என்றும் உறுதுணையாக இருப்பேன். கரூரில் ஆணழகன் போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.
விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்திட என்றும் உறுதுணையாக இருப்பேன். கரூரில் ஆணழகன் போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு அமைச்சர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் கரூர் மாவட்ட அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் இணைந்து நடத்தும் மிஸ்டர் கரூர் 2024 க்கான மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஆணழகன் போட்டியை குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடுவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆணழகன் போட்டி ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, கடந்த அக்டோபர் மாதம் மாலத்தீவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டத்தைப் இரண்டாவது முறையாக பெற்ற சேலம் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த சரவணன் மாரி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சிறப்பு தோற்ற காட்சியை நடத்தி, தனது உடல் வலிமையையும், அழகையும், பொலிவையும் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த சரவணன் மாதிரி இந்த பட்டத்தை பெற்றதன் மூலம் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்த அவரையும், அவரது குடும்பத்தாருக்கும் பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படும் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பேசும்போது, தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பல்வேறு பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஆணழகன் போட்டி மட்டுமல்ல, எந்த போட்டியாக இருந்தாலும், எந்த ஆண்டில் நடைபெற்றாலும் என்றென்றும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்தார்.