பொதுமக்கள் கோரிக்கை
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை பவானிசாகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மது போதையில் டாஸ்மாக் கடை முன்பு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் அந்த பகுதி அருகே செல்லவே பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து பகுதி மக்கள் கூறும்போது, பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் குடிமகன்களால் பயணிகளுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் ஒருவித பயத்துடனே இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சில சமயம் குடிமகன்கள் மது அருந்திவிட்டு இங்குள்ள சாலையோரம் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். சிலர் வாந்தி எடுத்து பார்க்க அருவருப்பாக உள்ளது. எனவே இங்கு செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.