புதிய வழித்தடத்தில் பேருந்துகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
புதிய வழித்தடத்தில் பேருந்துகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
புதிய வழித்தடத்தில் பேருந்துகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலம் சார்பாக, கரூர்- விழுப்புரம், கரூர் -கோயம்புத்தூர், பள்ளப்பட்டி- விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், எம் எல் ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசு,சக்திவேல் மற்றும் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.