சிவசக்தி நகர் அருள்மிகு ஸ்ரீ காக்கா பொண்ணு ஆதி கருப்பண்ணசாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம்.

சிவசக்தி நகர் அருள்மிகு ஸ்ரீ காக்கா பொண்ணு ஆதி கருப்பண்ணசாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம்.

Update: 2024-12-15 12:41 GMT
சிவசக்தி நகர் அருள்மிகு ஸ்ரீ காக்கா பொண்ணு ஆதி கருப்பண்ணசாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை அருகே சிவசக்தி நகரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காக்கா பொண்ணு ஆதி கருப்பண்ணசாமி, ஸ்ரீ கன்னிமார் சாமி ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை இரண்டாம் கால பூஜை ஹோமம் நடைபெற்று திரவியாகுதி, பூர்ணாகுதி, கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுது. மேலும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, கோவிலின் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று கோவில் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News